திருவண்ணாமலை, ஆக.14-
திருவண்ணாமலையில் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மாதாந்திர இயற்கை விவசாய சந்தை தொடக்க விழா பெரியார் சிலை அருகில் சனிக்கிழமை யன்று நடைபெற்றது.
இந்த விழாவிற்கு கலசபாக்கம் முன்னோடி இயற்கை விவசாயி பி.டி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னோடி விவசாயிகள் மீனாட்சி சுந்தரம், கே.வெங்கடே சன் ஆகியோர் முன்னிலை வகிக்க பத்திரிநாராயணன் வரவேற்றார். திருவண்ணாமலை உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பு தலைவர் ஆர்.செல்வராஜ், பருவதமலை உழவர் உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் பி.க.தனஞ்செ யன் ஆதித்யா, விவசாயிகள் ம.சிவக்குமார், பி.பழனி ஏ.தீனத யாளன் எஸ்.கௌரி பேராசிரியர் டி.எஸ்.முரளிராஜன் பாஸ்கரன் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு இயற்கை விவசாயம் குறித்து பேசினர்.
களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கம் சார்பில் சிறுதானிய கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கண்காட்சிகளில் நஞ்சில்லா நாட்டு காய்கறிகள் பழங்கள் பாரம்பரிய அரிசி, பருப்பு உள்ளிட்ட வேளாண் விளைபொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. இந்த தொடக்க விழாவில் கார்மேல் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் முதல்வர் கெட்சி சிரோனியா மற்றும்பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுமதி நன்றி கூறினார்.