சென்னை மாநகராட்சி 98ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர் ஆ.பிரியதர்ஷிணி அலுவலக திறப்பு விழா சனிக்கிழமையன்று (மார்ச் 26) நடைபெற்றது. எண்.6, ஆஸ்பிரான் தோட்ட முதல் தெரு, கீழ்ப்பாக்கம், சென்னை-10 என்ற முகவரியில் அமைந்துள்ள அலுவலகத்தை அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் அ.வெற்றி அழகன், தாயகம் கவி (எ) சிவக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா ஆகியோர் உடன் உள்ளனர்.