districts

img

காஞ்சிபுரத்தில் ராஜாஜி சந்தை திறப்பு

காஞ்சிபுரம்,ஆக.12- காஞ்சிபுரம் ரயில்வே சாலை யில்  ரூ.7 கோடி மதிப்பீட்டில்  புதியதாக கட்டப்பட்ட காய்கறி சந்தையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க, அமைச்சர் அன்பரசன் காய்கறி வியாபாரத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, மக்களவை உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், எழிலரசன்,  மேயர் மகாலட்சுமி யுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்