districts

நீரிழிவு நோயாளிகளில் மூன்றில் ஒருவர் கட்டுப்பாட்டோடு இருக்கிறார்கள் நாடு தழுவிய எம்.டி.ஆர்.எஃப் ஆய்வில் தகவல்

சென்னை, ஏப். 22- இந்தியாவில் நீரிழிவு நோயின் தற்போதைய நிலை குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிதியுதவியு டன் சென்னை நீரிழிவு ஆராய்ச்சி பவுண்டேஷன் (எம்.டி.ஆர்.எஃப்) தேசிய அளவில் ஆய்வு மேற்கொண்டது. நீரிழிவு நோய் என கண்டறியப்பட்ட வர்களில் மூன்றில் ஒரு  பங்கு நபர்கள் நீரிழிவை சிறப்பாக கட்டுப்படுத்தி வைத்துள்ளனர். இது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது என்று சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசிய இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரும்  டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் நிர்வாக இயக்குனருமான டாக்டர் அஞ்சனா கூறினார். 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1 லட்சத்து 13 ஆயிரத்தி 43 நபர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  ஆய்வு வெளிப்படுத்தும் அம்சங்கள்: நீரிழிவு உள்ளவர்களில் 36.3விழுக்காட்டி னர்  ரத்தத்தில் சர்க்கரை அளவை சிறப்பான கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர், 48.8விழுக்காட்டினர்  ரத்த அழுத்தத்தின் மீது நல்ல கட்டுப்பாட்டையும் மற்றும் 41.5 விழுக்காட்டினர் எல்டிஎல்  என்ற கெட்ட கொழுப்பை கட்டுக்குள் வைத்துள்ளனர். ரத்தத்தில்  சர்க்கரை அளவைப் பராமரிக்க  சர்க்கரை அளவீடு  சாதனத்தை  வீட்டில் பயன்படுத்துவதாக இவர்களில் 16.7 விழுக்காட்டினர்  தெரிவித்துள்ளனர்.  இவர்களில் 20 விழுக்காட்டினருக்கும் குறைவான நபர்களே ஒவ்வொரு நாளும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுகின்றனர்.  25 விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே மிதமான  முதல் கடுமையான  உடற்பயிற்சியை செய்வதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.