புதுச்சேரி, ஜூலை 13-
புதுச்சேரி விநாயகம் பட்டு கிராமத்தில் 100 நாள் வேலை உறுதி திட்டம் அமல்படுத்தாததை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரியை அடுத்துள்ள திருபுவனம் தொகுதிக்குட்பட்ட விநாயகம் பட்டு கிராமத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேல் கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்கவில்லை.
இதுகுறித்து பலமுறை புகார் செய்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனையடுத்து, அகில இந்திய விவ சாயிகள் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வில்லியனுர் வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனாலும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து, விநாயகம்பட்டி லுள்ள பிரதான சாலையில் மறியல் செய்தனர். போராட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மண்ணாடிப்பட்டு கொம்யூன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநிலச் செயலாளர் தமிழ்ச்செல்வன், சிபிஎம் கொம்யூன் செயலாளர் அன்புமணி, விவசாயிகள் சங்க செயலாளர் சங்கர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
சங்க பொருளாளர் தட்சிணாமூர்த்தி, நிர்வாகிகள் விநாயகம், சிவசங்கரி, உமா, சாமிக்கண்ணு, சுந்தர், கணபதி, சங்கர், பாலச்சந்தர் ,முத்து உட்பட திரளான விவசாய தொழிலாளர்கள் திரளா னோர் இதில் கலந்து கொண்டனர்.
அதிகாரி உறுதி
பிறகு,சேராப்பட்டு வட்டார வளர்ச்சித் துறை பகுதி ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இப்பிரச்சனைக்கு ஒரு வாரத்தில் தீர்வு காணப்படும் என்றும் அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.