districts

img

நடைபாதை சிறு கடை வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க அதிகாரிகள் ஒப்புதல்

சென்னை, ஆக. 19- விம்கோ நகர் சுரங்க பாதை பணிக்காக அகற்றப்படும் நடைபாதை சிறு கடைகளுக்கு தற்காலிக மாற்று இடம் கேட்டு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நடைபாதை சிறு வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட தலைவரும், மாமன்ற உறுப்பினருமான ஆர்.ஜெய ராமன் கடைகளை அகற்றுவதற்கு முன்பு, வாய்ப்புள்ள இடங்களில் மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என மெட்ரோ மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் முறையிட்டார். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு அருகாமையில் மாற்று இடம் வழங்க அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். இதை யடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதில் சிபிஎம் பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.பாக்கியம், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.செல்வகுமாரி, பகுதிக் குழு உறுப்பினர்கள்  வெங்கட்டையா, அன்பு, மாதர் சங்க பகுதிச் செயலாளர் கஸ்தூரி, அமைப்புசாரா சங்க நிர்வாகிகள் பட்டுராஜ், செம்மல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.