districts

img

விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு பட்டா போட்டுக்கொடுத்த அதிகாரிகள்

செ  ங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம்   பேரூ ராட்சியில் ஆசிரியர் நகர் என்கிற நகர் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் நிர்மாணிக்கப்பட்டது. அதில் சிறுவர் பூங்கா, பொதுக் கூடம், விளையாட்டுத் திடல் என பொது பயன்பாட்டிற்காக இடம் ஒதுக்கப்பட்டது. இவ்விடம் தற்போது ஆக்கிரமிப்பில் உள்ளதாக தெரிகிறது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ரூ 14 லட்சம் ஒதுக்கீடு செய்து பூங்கா அமைக்க பணிகளை துவக்கும் போது இவ்விடம் தனக்கு சொந்தமானது என சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்பிரச்சனை தற்போது காவல் துறையின்  விசாரணையில் உள்ளது. மேல் குறிப்பிட்ட இடங்கள் 1976ம் ஆண்டு பாகப்பிரிவினை கூர்சீட்டு மூலம் நிலங்கள் மனை பிரிவு களாக மாற்றப்பட்டது. அவ்வகை யில் புலஎண் 423/1ஹ/1ல்  0.40.5 ஹெக்டர் நிலம் 1980ம் ஆண்டு பி.எஸ்.லட்சுமி்ரத்தின ஐய்யர்  என்பவரின்  மனைவி பஞ்சா மிர்த அம்மாள்  என்பவர்  வீட்டு மனை பிரிவுகளாக பிரித்து பொது பயன்பாட்டிற்கான இடங்களை ஒதுக்கி மனைபிரிவுகளை விற்பனை செய்துள்ளார்.  இந்த பொது இடங்கள் சில நபர்களால் பல்வேறு காலகட்டங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட போது ஆசிரியர் நகரில் செயல்படும் பொது நல சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட அலுவர்க ளுக்கு மனுக்கள் தரப்பட்டுள்ளது, விளையாட்டு மைதானம் சில சுயநலவாதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சில அரசு அதி காரிகளை பயன்படுத்தி முறை கேடாக பட்டா மாற்றம் செய்யப் பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் விளையாட்டு மைதானத்தை  1997ம் ஆண்டு ஒரு நபர் ஆக்கிரமித்த போது அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்  மாவட்ட உரிமையில் நீதிமன்றம்  பொது உபயோகத்திற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் யாரும் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்வதோ, இடை யூறு செய்யக் கூடாது என உத்தர விட்டது. அதனை மீறுபவர்கள் கடுமை யான சிவில் மற்றும் கிரிமினல் தண்ட னைக்கு உள்ளாவர்கள் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013ம் ஆண்டு இறுதியில்  மீண்டும்  விளையாட்டு மைதானம் ஆக்கிர மிப்பு செய்யப்படுவது குறித்து ஆசி ரியர் நகர் பொதுநல மன்றம் சார்பாக காஞ்சிபுரம் மண்டல பேரூ ராட்சிகளின் உதவி இயக்குநருக்கு  புகார் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் திருக் கழுக்குன்றம் வட்டாட்சியர், திருக்கழுக்குன்றம் பத்திர பதிவு அலுவலர் உள்ளிட்ட அதிகாரி களுக்கும் முறையீடு செய்து புல எண்கள் மீது கிரய பத்திரம் ஏதும் பதிய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 423/1A/1புதிய சர்வே எண்கள் 423/58, 428/67, 426/1G, 428/2, 430/1 ஆகிய சர்வே எண்கள் அனைத்தும் பேரூராட்சி பொது இடங்களாகும். இதில் தனி நபர்கள் யாரும் ஆக்கிரமிப்பு செய்வது, பத்திரப் பதிவோ, பெயர் மாற்றமோ பட்டா மாற்றமோ செய்யகூடாது என அனைத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு நீதிமன்ற தீர்ப்பின் நகல் உட்பட அனைத்து ஆவணங்களும் பதிவு தபால் மூலம் கடந்த ஜனவரி  19 அன்று அனுப்பபட்டுள்ளது. இருப்பினும் கடந்த 11 ஆம் தேதி ராஜேந்திரன், ராஜா ஆகிய இருவர் பெயரில் அதிகாரம் பெற்று பத்திரப் பதிவு செய்துள்ளனர்.   இதற்கு பவர் கொடுத்தவர் சென்னையை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. தற்போது செய்யப்பட்ட பத்திரத்தின்  பதிவு எண் 203/2024 இதன் அடிப்படையில் ரகு என்பவருக்கு பிளாட் 1 பத்திரப் பதிவு செய்து விற்பனை செய்துள்ளனர். இச்செயலுக்கு துணை போன அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பத்திரப்பதிவை ரத்து செய்து பவர் கொடுத்தவர் பவர் ஏஜெண்டுகள் உள்ளிட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாகவும், ஆசிரியர் நகர் விளையாட்டு குழு சார்பாகவும் தமிழக முதல்வரையும் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரையும் மாவட்ட நிர்வாகத்தையும் கேட்டுக் கொண்டுள்ளது.

இ.சங்கர் 
தலைவர்
 ஆசிரியர் நகர் விளையாட்டு மைதானம் மீட்பு குழு