சென்னை, செப். 20- மிகப் பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய கொடுங்கையூர் எரி உலை திட்டத்தை சென்னை மாநக ராட்சி கைவிட வேண்டும் என வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் டி.கே.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜவகர் நகர் எரி உலை ஆலை மற்றும் துண்டுக்கல் எரி உலை ஆலை களில் உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள வரம்பை மீறி நச்சுத்தன்மை உள்ள கன உலோ கங்கள் 1000 மடங்குக்கு மேல் அதிகம் இருப்பதாக அதிர்ச்சி செய்தியை தெலுங்கானா மாநி லத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் இன்று அம்பலப் படுத்தியுள்ளன. உதாரணத்திற்கு ஜவகர் நகர் எரி உலை ஆலையில் காட்மியம் 858.65 மி.கி. மற்றும் துண்டுக்கல் எரி உலை ஆலையில் காட்மியம் 956.69 மி.கி. உள்ளது. உலக சுகா தார நிறுவனம் நிர்ண யித்துள்ள வரம்பு 0.8 மி. கி ஆகும். அவ்வா றெனில், உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த அளவைவிட ஜவகர் நகர் மற்றும் துண்டுக்கல் ஆலை களில் முறையே 1,073 மடங்கு, 1,195 மடங்கு அதிகமாக நச்சுத்தன்மை இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஆலைகளையும் நிர்வகிக்கக்கூடிய ராம்கி என்கிற மூல நிறுவனம்தான், கொடுங்கையூர் எரி உலை ஆலையை டெண்டர் எடுத்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் பெருநகர சென்னை மாநக ராட்சி மேயர் தலைமையில் கமிஷ னர், கவுன்சிலர்கள் மற்றும் அதி காரிகள் கொண்ட குழு ஜவஹர் நகர் எரிஉலை ஆலைக்கு நேரடி யாக விசிட் செய்து. “நச்சுத் தன்மை எத்தனை சதவீதம் வெளி யேறுகிறது” என்று சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் கேட்ட தற்கு “ஜீரோ பர்சன்டேஜ்” என்று அந்த கம்பெனியின் தலைமை அதி காரி விளக்கம் அளித்தார். “இதற்கு ஆதாரம் இருக்கிறதா, அப்படி இருந்தால் அந்த ரிப்போர்ட் நகலை எங்களுக்கு கொடுங்கள்” என்று மாநகராட்சி கவுன்சிலர்கள் கேட்ட போது, மாநகராட்சி ஆணை யரும் அந்த நகலை கொடுங்கள் என்று அறிவுறுத்திய போதும், பின்னர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் அந்த நகலை கேட்டு வலியுறுத்திய போதும் இது வரை ஹைதராபாத் ஜவகர் நகர் கம்பெனி நிர்வாகம் எந்த நகலை யும் கொடுக்கவில்லை.
இதில் அதிர்ச்சிகரமானது என்ன வென்றால், ராம்கி என்ற இந்த நிர்வாக தலைமை அதி காரி எந்த நச்சுத்தன்மையும் வெளி யேறவில்லை என்று சாதாரண மக்களுக்கு பொய் செய்தியை பரப்பியதுடன் நிற்கவில்லை; மாறாக சென்னை மேயர், ஆணை யாளர், அதிகாரிகள் மற்றும் கவுன்சி லர்கள் அனைவரிடமும் உண்மை க்கு மாறான பொய் செய்தியை மிகத் துணிச்சலாக கூறியுள்ளது. அந்த கம்பெனியின் நம்பகத் தன்மையே கேள்விக்குறியாகி உள்ளது. மக்களின் உயிரோடும், ஆரோக்கியத்தோடும், எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கையோடும் அந்த கம்பெனி விளையாட துணிந்து விட்டது. இதிலும் கொடுமை யானது என்னவென்றால், மேயர் தலைமையிலான குழு ஏப்ரல் மாதம் சென்ற நிலையில், அதற்கு 20 நாட்களுக்கு முன்பு மார்ச் மாதமே மத்திய மாசு கட்டுப் பாட்டு வாரியத்தின் அறிக்கை தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. ஆதா ரப்பூர்வமான இந்த விபரங்களை எல்லாம் மூடி மறைத்து இருப்பது கொடூரமானதாகும். கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி மாநகராட்சி மேயர் அவர்களை வடசென்னை குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் சூழலியல் வல்லுனர்கள் சந்தித்து கொடுங்கையூரில் அமைப்பதற்கு உத்தேசித்திருக்கக்கூடிய எரி உலை ஆலைத் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், பசுமை சென்னைக்கான முன்னெடுப்பு என்ற மாற்றுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்.
அப்போது மேயர் அவர்களிடம் “ஹைதராபாத் எரி உலை ஆலை நிர்வாகம் எங்களைப் போன்ற சாமானியர்களை ஏமாற்றுவது மட்டுமல்ல, உங்களைப் போன்ற அதிகாரத்தில் உள்ளவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது” என்பதை சுட்டிக் காட்டினோம். இந்த நச்சுத்தன்மை வெளியேற்றத்திற்கு ஆதாரமாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமானது, தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அளித்துள்ள அறிக்கையையும் ஆதாரமாக மேயர் அவர்களிடம் கொடுத்தோம். மேயர், “நிச்சயமாக இதைப்பற்றி கமிஷனரும், நானும், திடக்கழிவு மேலாண்மை துணை ஆணையரும் ஸ்டடி செய்து உரிய நடவடிக்கை எடுப்போம்” என்று எங்களிடம் உறுதி அளித்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை (செப். 19) தெலுங்கானா மாநி லத்தில் செயல்பட்டுக் கொண்டி ருக்கும் சிவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக் கையை ஆதாரமாகக் கொண்டு உண்மையை உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளன. தினசரி 10 டன் எரிக்கும் மணலி சின்ன மாத்தூரில் காட்மியம் அளவு 115 மி.கி. இருந்ததற்காக அந்த ஆலை சீல் வைக்கப்பட்டது. ஆனால் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஜவகர் நகர் மற்றும் துண்டுக்கல் ஆலைகளில் ஆயிரம் மடங்குக்கு மேல் காட்மியம் என்ற கன உலோக நச்சுத்தன்மை இருப்பது ஆதாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி மிகப் பெரும் ஆபத்தாக விளங்கக்கூடிய கொடுங்கையூர் எரி உலை திட்டத்தை கைவிடுகிறோம் என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். பயோ மைனிங் செய்து மீட்டெடுக்கப்படும் கொடுங்கையூர் குப்பை வளாக மொத்த நிலத்திலும் பிரம்மாண்டமான சுற்றுச்சூழல் பூங்காவையும், முப்பதாயிரம் புத்தகங்கள் கொண்ட, உயர்நிலை தேர்வுகளுக்கு மாணவர்கள் தங்கி பயில்வதற்கு வசதியாக பல்நோக்கு பயிற்சி மையத்துடன் கூடிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தை போன்ற பிரம்மாண்ட நூலகத்தையும் அமைத்து தருகி றோம் என்ற அறிவிப்பையும் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.