தாம்பரம், மே 6 - வண்டலூர் உயிரியல் பூங்காவில் வியாழனன்று வங்க புலி, செந்நாய்கள் உள்பட பல்வேறு புதிய உயிரினங்கள் கொண்டு வரப்பட்டன. கர்நாடக மாநிலம், மங்களூருவில் உள்ள டாக்டர் கே சிவராம காரந்த் பிலிகுலா உயிரியல் பூங்காவில் இருந்து 2 ஜோடி செந்நாய், ஒரு ஆண் வங்கப்புலி, 2 நீக்கத்தான் பாம்பு, ஒரு ஜோடி விட்டேக் கர் மண்ணுளி பாம்பு ஆகியவை புது வரவாக கொண்டு வரப்பட்டன. இதற்கு பதிலாக, வண்ட லூர் உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு பெண் வெள்ளை புலி, ஒரு பெண் நெருப்பு கோழி ஆகியவை கர்நாடக மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன என பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.