சென்னை,ஜன.9- மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி யின் நூற்றாண்டையொட்டி, ‘இசையாய் கலைஞர்’ என்ற நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகை யில், “மனித உணர்வுகளில் இயல்பாய் கலந்திருப்பது கலை. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவனையும் அறியாமல் ஒரு கலையுணர்வு இருக்கும் என்று சொல்வார்கள். இசைக்கு என்னென்ன குணங்கள் இருக்கிறதோ அந்த குணங்கள் அனைத்தும் கலைஞரிடம் இருந்தது. இசைக்கு நல்ல குரல் வளம் தேவை. ஏறத்தாழ 80 ஆண்டுகள் தமிழர்களை ஆட்கொண்டது”என்றார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ஐஏஎஸ் அதிகாரி எம்.எஸ்.சண்முகம், வாகை சந்திரசேகர், மேயர் பிரியா ராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் சுதர்சனம், தாயகம் கவி, அரவிந்த் ரமேஷ், மயிலை வேலு, கணபதி, ஜெ.கருணா நிதி, கே.பி.சங்கர், ஐட்ரீம் மூர்த்தி, எபினேசர், பிரபாகர்ராஜா, துணை மேயர் மகேஷ்குமார், மகளிர் ஆணைய தலைவர் குமரி விஜயா உட்பட பலர் கலந்து கொண்டனர்.