districts

சென்னை வெள்ள பாதிப்புக்கு ரூ.1000 கோடி சட்டபேரவையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை,ஜன.7- சென்னை வெள்ள பாதிப்புக்கு ரூ.1000கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ள்ளதாக  தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக் கும் தீர்மானத்திற்கு பதில் அளித்து பேசிய  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:-   வெள்ள பாதிப்புக்கு தி.மு.க. அரசை எடப்பாடி பழனிசாமி குற்றம்  சாட்டியுள்ளார். நம்மை குறை கூறு வதற்கு அவர்களுக்கு தகுதியில்லை. 2015-ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியை நள்ளிரவில் திறந்து விட்டு செயற்கை பேரிடரை உருவாக்கி யவர்கள்தான் அவர்கள்.

அப்போது மக்கள் நூற்றுக்கணக்கில் பலி யானார்கள். சொந்த ஊரிலேயே அகதிகள் போல ஆக்கப்பட்டார்கள். ஆனால் தமிழக அரசு சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை திறமையாக கையாண்டது. அடுத்தடுத்து தொடர்ச்சியாக பெய்த  கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு களை நிரந்தரமாக சரி செய்ய ஐ.ஏ. எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமை யில் அமைக்கப்பட்ட குழுவினர் அறிக்கை அளித்துள்ளனர். இதையடுத்து சென்னை வெள்ள  பாதிப்புகளை சரி செய்ய முதல்  கட்டமாக ரூ.1000 கோடி ஒதுக்கப்பட் டுள்ளது. வரும் காலங்களில் சென் னையில் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கை களும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அம்மா உணவகங்கள் மூடப்படாது
தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களை அ.தி.மு.க. ஆட்சியில் முடக்கி உள்ளனர். குறிப்பாக பல இடங்களில் கருணா நிதியின் பெயர்கள் மறைக்கப்பட் டுள்ளன. செம்மொழி பூங்காவில் கலைஞர் பெயரை மறைக்கும் வகை யில் செடி, கொடிகளை நட்டு வைத்த னர். இராணி மேரி கல்லூரியிலும் கலைஞர் பெயர் மறைக்கப்பட்டது. கலைஞர் ஆட்சியில் புதியதாக கட்டப்பட்ட சட்டப்பேரவை கட்டி டத்தை மருத்துவமனையாக மாற்றி னார்கள். கலைஞர் கொண்டுவந்த சமத்துவபுரம், உழவர் சந்தை, நமக்கு நாமே திட்டங்களும் முடக்கப் பட்டன.இப்படி தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் முடக்கப் பட்டது பற்றி பட்டியல் இட்டுக் கொண்டே செல்லலாம்.

ஆனால் தி.மு.க. ஆட்சியில் நாங்கள் அது போன்று செயல்படவில்லை. அந்த  எண்ணமும் எனக்கு இல்லை. அத னால் தான் ஜெயலலிதா நினை விடத்தை பொதுப்பணித் துறையினர் பராமரித்து வருகிறார்கள்.அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல் பட்டு வருகின்றன. வியாழனன்று இந்த பேரவை யில் பேசிய அவை முன்னவர் அம்மா உணவகத்தை மூடினால் என்ன தவறு? என்று கேள்வி எழுப்பி னார். ஆனால் அதுபோன்ற எண்ணம்  எனக்கு எப்போதும் ஏற்பட்டது இல்லை. எதிர்காலத்திலும் நிச்சயம் ஏற்படாது. அம்மா உணவகங்கள் எக்காரணத்தை கொண்டும் மூடப் படாது என்பதை தெரிவித்து கொள்கி றேன் என்றார்.

;