சென்னை:
செய்தித்தாள், காட்சி, ஒலி ஊடக பத்திரிகையாளர்கள் முன்களப் பணியாளர்களாக கருதப்படுவார்கள் என்று தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு டி.யூ.ஜே. நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் (டி.யூ.ஜே.) சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றதேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக கூட்டணி பெரும்பான்மையான இடங்களைப்பெற்று வெற்றி பெற்றதற்கு டி.யூ.ஜெ. சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலின் செவ்வாயன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் செய்தித்தாள், காட்சி, ஒலி ஊடகங்களில் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் இனி முன்களப்பணியாளர்களாக கருதப்படுவார்கள் என்று தெரிவித்துள் ளார். இது அத்தனை பத்திரிகையாளர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதல் அறிவிப்பு பத்திரிகையாளர்கள் சம்பந்தப்பட்டதாக இருப்பதால் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.பத்திரிகையாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று டியூஜெ சார்பிலும்பல்வேறு சங்கங்கள், அமைப்புகளும்வலியுறுத்தின. மேலும், பத்திரிகையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாக்க சில மாநிலங்களில் அமல்படுத்தப்படுவதுபோல், ‘பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தினை’ தமிழகத்திலும் அமல் படுத்திட வேண்டும்.