districts

img

தொழிற்பயிற்சி நிலையத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்

ராணிப்பேட்டை, ஜன. 4 – ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய தாக துவக்கப்பட்டுள்ள 4.0 தொழில் மையத்தில் நவீன இயந்திரங்கள் கொண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் செயல்முறை பயிற்சிகளை தொழிலாளர் நலத்துறைஅமைச்சர் சி.வி. கணேசன் வியாழனன்று (ஜன. 4) ஆய்வு செய்தார். மற்றும் தொழிற்பயிற்சி நிலைய பணி மனையில் எலக்ட்ரிஷியன், பிட்டர், மெக்கானிக்கல் உள்ளிட்ட பயிற்சி வகுப்பு கள் நடைபெறுவதை அவர் ஆய்வு செய்தார். மேலும் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவ, மாணவியர்கள் அரக் கோணம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதால் தினமும் ஆட்டோவில் கூட்ட நெரிசலில் வர வேண்டியுள்ளது என தெரிவித்ததை கேட்ட அமைச்சர் மாணவ, மாணவியர்களின் போக்குவரத்து சிரமத்தை போக்கும் வகை யில் அரக்கோணம், திருவள்ளூர் வழித் தடத்தில் அரக்கோணம் முதல் தொழிற் பயிற்சி நிலையம் அமைந்துள்ள புளிய மங்கலம் வரை காலை, மாலை இருவேளை யும் உடனடியாக தலா இரண்டு சிறப்பு பேருந்துகளை இயக்கப்படும் என அறிவித்தார். பின்னர் இதுகுறித்து  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனரிடம் தொலைபேசி வாயிலாக பேசி சிறப்பு பேருந்துகள் ஓரிரு நாட்களில் இயக்கப்படும் என மாணவ மாணவியர்களுக்கு தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் வளர்மதி, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் சுந்தரவள்ளி,  திறன் மேம்பாட்டுக்கழக கூடுதல் இயக்குனர் ரவிச்சந்திரன், உதவி இயக்குனர் பாபு, தொழில் மேலாண்மைக் குழுத் தலைவர் ஹரிதாஸ், ஒன்றிய குழு தலைவர் நிர்மலா சௌந்தர், வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா, வட்டாட்சியர் சண்முக சுந்தரம், தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சித்ரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.