districts

இரு மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் சேவை

சென்னை,ஆக.1-

    இந்தியாவில் முதல் முறையாக இரு மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

   ஓசூர் – பெங்களூரு இடையே நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வேலை நிமித்தமாக பயணம் மேற்கொள்கின்றனர். இதனால், ஓசூர் – பெங்களூரு நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து, பெங்களூரு மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் ஓசூர் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டது.

    இந்த நிலையில், தமிழகம் – கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு இடையே சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகளை தொடங்கி உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஓசூர்-பொம்மச்சந்திரா இடையே மெட்ரோ சேவைக்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயார் செய்ய மெட்ரோ நிர்வாகம் டெண்டர் கோரியது. பொம்மச்சந்திரா மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஓசூர் 20.5 கிமீ தொலைவில் உள்ளது.20.5 கிமீ தொலைவில் 11.7 கிமீ கர்நாடக மாநிலத்திலும் 8.8 கிமீ தமிழ்நாட்டிலும் உள்ளது. இரண்டு இடங்களையும் இணைக்கும் போது மாநிலங்கள் போக்குவரத்து அமைப்புக்கான திட்டச் செலவை பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.