திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சி. என். அண்ணாதுரையை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. தி.மலை மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த பிரச்சாரக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எம். சிவக்குமார், நகர செயலாளர் எம்.பிரகலநாதன், மாவட்ட குழு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.