districts

img

மாநகராட்சியில் என்எம்ஆர் உள்ளிட்ட தொழிலாளர்களை நிரந்தரம் செய்க ரிப்பன் மாளிகை வளாகத்தில் சிஐடியு உண்ணாநிலை

சென்னை, ஆக. 23 -

     என்எம்ஆர் உள்ளிட்ட தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி புதனன்று (ஆக. 23) ரிப்பன் மாளிகை வளாகத்தில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது.

     480 நாட்கள் பணி முடித்த தொழிலாளர்களை சட்டப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தி வரு கிறது. இதன் தொடர்ச்சி யாக திமுக தேர்தல் அறிக்கையில், 10 ஆண்டு கள் பணி முடித்த ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்தது. அதன்படி அரசு செயல்படுத்தவில்லை.

    எனவே, ஒப்பந்த அடிப் படையில் பணியாற்றும் என்யுஎல்எம், மலேரியா, சாலை, பூங்கா, அம்மா உணவகம், துப்புரவு தொழி லாளர்களையும் மற்றும் தொகுப்பூதியத்தில் பணி யாற்றும் என்எம்ஆர் தொழி லாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது.

      சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், பழைய ஒய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல் படுத்த வேண்டும், ஈட்டிய விடுப்பை மீண்டும் வழங்குவதோடு, அக விலைப்படி நிலுவையை தர வேண்டும்,

    காலிப்பணி யிடங்களை நிரப்புவதோடு, நகர்ப்புற உள்ளாட்சிகளின் நிரந்தரப் பணியிடங்களை குறைக்கும் அரசாணை 152ஐ திரும்ப பெற வேண்டும், அரசாணைக்கு புறம்பாக மாவட்ட ஆட்சி யர் நிர்ணயித்த கூலி வழங்கப்படும் என்ற சட்ட விரோத உத்தரவை திரும்ப பெற வேண்டும், நிரந்தரத் தன்மையுள்ள குப்பை அள்ளும் பணியை தனி யாருக்கு கொடுப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன,

    சங்கத்தின் தலைவர் ஜெ.பட்டாபி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தை சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன் தொடங்கி வைத்தார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், சிஐடியு மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை,  சங்கத்தின் முன்னாள் தலை வர் எல்.சுந்தர ராஜன், பொதுச் செயலாளர் பி.சீனி வாசலு, பொருளாளர் பா.ராஜேந்திரன், துணைப் பொதுச் செயலாளர்கள் டி.ராஜன், ஜி.முனுசாமி, துணைத்தலைவர்கள் கே.தேவராஜ், பா.சுந்தரம் உள்ளிட்டோர் பேசினர்.