சென்னை, பிப். 3 - சென்னை மாநகராட்சி 123ஆவது வார்டியில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எம்.சரஸ்வதி வியாழனன்று (பிப்.3) நுங்கம்பாக்கத்தில் உள்ள 9வது மண்டல அலுவ லகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.குமார், கே.வனஜகுமாரி, ம.சித்ரகலா, மயிலாப் பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.