ராணிப்பேட்டை, ஆக. 27– ராணிப்பேட்டை மாவட்ட சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ராணிப்பேட்டையில் லோடு ஆட்டோ ஸ்டாண்ட் வெள்ளியன்று (ஆக. 25) கிளைத் தலைவர் எம். விஜயகுமார் தலைமையில் துவக்கப்பட்டது. இதில் கிளைச் செயலாளர் கே. சத்தியமூர்த்தி, பொருளாளர் டி. சீமோன் பிரேம்குமார், துணைத் தலைவர் எஸ். ஜெயபால், துணைச் செயலாளர் யு. நசீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் தாலுகா செயலாளர் ஆர். மணிகண்டன் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார். அதனை தொடர்ந்து மாவட்டத் தலைவர் பி. மணி, செயலாளர் கே.கே.வி. பாபு, சட்ட ஆலோசகர் பி. முஹம்மது சாதிக் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். உடன் மாவட்ட துணைச் செயலாளர் டி. ஜெகன், யு. வேலு, ராஜேஸ்வரி திரையரங்கம் ஆட்டோ ஸ்டாண்ட் ஆர். உசேன் பாஷா ஆகியோர் கலந்துகொண்டனர். இறுதியாக மாவட்டப் பொருளாளர் கே. ரமேஷ் நன்றி கூறினர்.