சட்டமேதை டாக்டர் அம்பேத்காரின் பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி சட்டப்பேரவை அருகே உள்ள அவரது சிலைக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுச்சேரி செயலாளர் ராமசாமி தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், கொளஞ்சியப்பன், சீனிவாசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் அரிகிருஷ்ணன், தெய்வசிகாமணி உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.