districts

சிஐடியு ஆட்டோ டெம்போ தொழிலாளர் சங்கம் துவக்கம்

கிருஷ்ணகிரி, டிச. 28- ஓசூர் பாரதி நகரில் புதிதாக சிஐடியு ஆட்டோ டெம்போ தொழிலாளர்கள் சங்கம் துவக்கப்பட்டது. ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். சங்க கொடி ஏற்றப்பட்டு பெயர்ப்பலகை திறக்கபட்டது. ஆட்டோ சங்க பகுதிக்கு செயலாளர் ஆர்.கே.முத்து, தலைவர் குமார்,பொருளாளர் பூபதி, டெம்போ பகுதி செயலாளர் சான் பாஷா, தலைவர் ஆர்.கே.முத்து, பொருளாளர் ரங்கநாதன், துணைத் தலைவர் ரவிச்சந்திரன், மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஸ்ரீதரன், முருகன், குணசேகரன் உட்பட கலந்து கொண்டனர்.