districts

கடந்த மாதம் 8.46 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்

சென்னை, ஆக. 1 -

    சென்னையில் ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் 8 லட்சத்து 46 ஆயிரத்து 816 பயணிகள் மெட்ரோ ரயில்களில் அதிகம் பயணித்துள்ளனர். இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் அதுவே அதிகமாகும்.  

   சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கியூஆர் குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20 விழுக்காடு கட்டண தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.