விழுப்புரம், ஜூலை. 13- விழுப்புரம் புதிய பேருந்து நிலை யத்தின் சுவர்களில் நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை சுகாதாரம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் கைவண்ணங்களில் ‘நமது வீட்டையும் சுற்றுச்சூழலையும், பொது இடங்களையும் பாதுகாப்பது எப்படி?” என்பது குறித்த விழிப்புணர்வு ஓவி யங்களை வரைந்தனர். அந்த மாணவர்களை பாராட்டும் வகையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் சான்று மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரம் புதிய பேருந்து நிலை யத்தில் ஜூலை 13 அன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கி னார். சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, விழுப்புரம் நகரமன்றத் தமிழ்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்திப் பேசினர்.