பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை விளக்கி கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் தளி ஒன்றியம் அந்தேவனப்பள்ளியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிரச்சார இயக்கம் ஒன்றியச் செயலாளர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில குழு உறுப்பினர் டில்லிபாபு, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அனுமப்பா சிவப்பா, சந்திரசேகர், முனிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.