districts

ரூ.30 ஆயிரம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்: 2 பேர் கைது

சென்னை,அக்.5- போரூர் லட்சுமி நகர் பகு தியை சேர்ந்தவர் மகேஷ். இவரது மகன் சபரி (16) பாலிடெக்னிக் கல்லூரிரில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நண்பர்களுடன் விளையாடி விட்டு இரவு 9 மணிக்கு போரூர் ரவுண் டானா வழியாக வீடு திரும் பிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக் கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென சபரியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி  கடத்தி சென்றனர்.  பின்னர் சபரியின் செல் போனை பறித்து அவரது  தாய் சுசிலாவை செல்போ னில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், “உங்கள் மகனை கடத்தி வைத்துள் ளோம் ரூ. 30 ஆயிரம் பணம்  கொடுத்தால் விட்டு விடுகி றோம்” என்று கூறி மிரட்டல் விடுத்தனர்.  பின்னர், இதுகுறித்து சுசிலா போரூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரி வித்தார். உதவி ஆணையர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன், ஆய்வாளர் சந்திரசேகர் ஆகியோர் விரைந்து வந்து மர்ம நபர்கள் சுசிலாவை தொடர்பு கொண்ட செல் போன் எண்ணின் “டவர் சிக்னலை”வைத்து விசா ரணை நடத்தினர்.  அப்போது குன்றத்தூர் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் சப ரியை மர்ம நபர்கள் கடத்தி  வைத்து இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர் சபரியை பத்திர மாக மீட்டனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த பாலாஜி மற்றும் காரம்பாக்கம் பகுதியை சேர்ந்த விஜய் ஆகிய இருவரையும் கைது  செய்தனர். கைது செய்யப் பட்ட இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு திருட்டு  மற்றும் கொள்ளை வழக்கு கள் இருப்பது விசாரணை யில் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் தீவிர விசா ரணை நடந்து வருகிறது.

;