districts

img

ஏரி, குளம் ஆழப்படுத்தும் பணி

கள்ளக்குறிச்சி, ஆக 2 - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.  பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரி விக்கையில். திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம்,ஜி அரியூர் ஊராட்சி ஜி அரியூ ரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.24.23 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிட கட்டுமானப் பணியையும்,ஜி அரியூ ரில் 15 வது நிதிக் குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதி தாக கட்டப்பட்டு வரும் பொது சுகாதார வளாக கட்டிட கட்டுமானப் பணியையும்  பார்வையிட்டு ஆய்வு செய்ததாக கூறினார்.  தொடர்ந்து ஜி அரியூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.12.89 லட்சம் மதிப்பீட்டில் பெரிய ஏரி குளம் ஆழப்படுத்து தல் பணியையும், திம்மச்சூர் ஊராட்சி, திம்மச்சூர் மகாத்மா காந்தி தேசிய ஊரிக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.13.83 லட்சம் மதிப்பீட்டில் பெரிய ஏரி மேற்கு பகுதி புதிய குளம் மேம்பாட்டு செய்தல் பணியையும், சித்தேரியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.16.75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டுப்பட்டுள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிப் பணியை யும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கொளஞ்சிவேல், கஸ்தூரி,சம்பந்தப்பட்ட பிறத்துறை அலு வலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.