கள்ளக்குறிச்சி,ஜன. 13- உலகெங்கும் வாழும் தமிழர்கள் தைத்திருநாளில் உழவுத் தொழிலை போற்றும் விதமாக பொங்க லிட்டு பொங்கல் திருநாள் கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் சமத்துவம், சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் தமிழர்களின் பாரம்பரி யத்தை போற்றும் விதமாக வும் பொங்கல் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்கள் தங்களது குடும்பத்துடன் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் குடும்பத்துடன் பங்கேற்றார். இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய சிங் மீனா, காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர், செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் மற்றும் பணி யாளர்கள் கலந்து கொண்ட னர். இந்த நிகழ்வில் உரை யாற்றிய ஆட்சியர், “இந்த ஆண்டு பொங்கல் விழாவை செய்தியாளர்கள் குடும்பத்துடன் கொண்டாடி யது மிகுந்த மகிழ்ச்சிய ளிக்கிறது” என்றார்.