districts

img

ஜேஇஇ தயாரிப்புக்கான முன்பயிற்சித் திட்டம் துவக்கம்

சென்னை, பிப்.6- ஆகாஷ் எஜூகேஷனல் நிறுவனம் ஐஐடி நுழைவுத்தேர்வான ஜேஇஇ முன்தயாரிப்புக்காக இன்விக்டஸ் எனும் பயிற்சி திட்டத்தை  துவக்கியுள்ளது.  இந்த திட்டம் தனிப்பட்ட மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த திட்டமாகும்.  ஐஐடி மற்றும் உலகளவில் பிரபலமான பல்கலைக் கழகங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆகாஷ் நிர்வாக இயக்குநர் தீபக் மெஹ்ரோத்ரா கூறினார். இந்த உயர் தீவிர பயிற்சி திட்டம், டிஜிட்டல் மற்றும் நேரடி கற்றல் முறைகளை ஒருங்கிணைத்து, தனிப்பட்ட கவனம் வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜேஇஇ இறுதி கட்டத்திற்கான இலக்கு நோக்கிய ஆயத்தம், முறைபடுத்தப்பட்ட மறுதயாரிப்பு மற்றும் தேர்வு பயிற்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன  என்றும் அவர் தெரிவித்தார்.  இன்விக்டஸ் வெறும் ஒரு பயிற்சி திட்டம் அல்ல; இது ஐஐடிகளில் சிறந்த தரவரிசையைப் பெற நினைக்கும் மாணவர்களுக்கான ஒரு மாறுபட்ட கல்விப் பயணம் என்றும் அவர் கூறினார்.