districts

சென்னையில் ஜப்பானிய திரைப்பட விழா

சென்னை, நவ.27- ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் இடை யிலான தூதரக உறவுகளின் 70வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், ஜப்பான் அறக்கட்டளை, சென்னையில் ஜப்பான் திரைப்படம், இசை மற்றும் கலாச்சார விழாவை நடத்தியது. இந்த விழா மூன்று வருட இடை வெளிக்குப் பிறகு மீண்டும்  சென்னையில் நடைபெற்றது. ஞாயிறன்று நிறைவடைந்த இந்த விழாவில் ஜப்பானின் பிரபலமான ராக் இசைக்குழுவான ராட்விம்ப்ஸின் பதிவுசெய்யப்பட்ட இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. ஜப்பான் திரைப்படம் மற்றும் இசை விழாவில் மகோடோ ஷின்காயின் புகழ்பெற்ற அனிமேஷன் திரைப்படங்களான 'வெதரிங் வித் யூ, 'யுவர் நேம்.', 'த கார்டன்ஸ் ஆப் வோர்ட்ஸ், 'சில்ரன் ஹூ` சேஸஸ் லாஸ்ட் வாய்சஸ், '5 சென்டிமீட்டர் பர் செகண்ட்' மற்றும் 'தி பிளேஸ் ப்ராமிஸ்டு இன் அவர் எர்லி டேஸ்' ஆகிய திரைப்படங்கள் திரையிடப்பட்டன.   இதே போன்ற திரைப்பட மற்றும் இசை விழா  டிசம்பர் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை பெங்களூருவில் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. துவக்க விழாவில் கலந்து கொண்ட சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டின் துணைத் தூதர் டேகா மசாயுகி " இந்தியா-ஜப்பான் இரு நாடு களும் பாரம்பரியமான வரலாற்று தொடர்பு களோடு  மட்டுமல்லாமல், இரு நாட்டு மக்க ளிடையே ஆழமான பரிமாற்றங்கள், பொரு ளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்புடன் இயற்கையான பங்காளி களாக திகழ்கிறோம் என்று கூறினார்.