கிருஷ்ணகிரி,ஜன.17- மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்க ளுக்கு ஏற்படும் கருப்பை, வாய்,மார்பக புற்று நோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் போன்றவற்றை ஆரம்ப நிலையில் கண்டறிந்து முற்றிலும் குணப்படுத்தும் நோக்கில் ஐவிடிபி தொண்டு நிறுவனம் சுமார் ரூ. 10 ஆயிரம் மகளிருக்கு பரிசோதனை செய்துள்ளது. இதன் மூலம் நோய் அறிகுறிகள் கண்ட றியப்பட்ட மகளிருக்கு பெங்களூரு செயின்ட் ஜான்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிறப்பு புற்று நோய் மருத்துவர் கிருஷ்ணகிரி புனித லூயிஸ் மருத்துவமனைக்கு வருகை தந்து கால்போஸ்கோப்பி, பயாப்சி,தெர்மல் அப்லேஷன்,லீப் சிகிச்சைகளும்,மார்பக புற்றுநோய் அறிகுறிகள் உள்ளவர்க ளுக்கு மெமோகிராம்,எஃப் என் ஏ சி,ஸ்கேன் போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை சுய உதவி குழு உறுப்பி னர்களின் புற்றுநோய் மருத்துவ சிகிச்சைகளுக்காக ரூ. 50 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பரிசோதனை களை மேற்கொள்ள உதவும் வகை யில் ரூ.3.68 லட்சம் மதிப்பிலான கால்போஸ்கோப்பி கருவி புனித லூயிஸ் மருத்துவமனைக்கு ஐவிடிபி நிறுவன தலைவர் பிரான்சிஸ் நன்கொடையாக வழங்கினார்.மருத்துவமனை இயக்குநர், மருத்துவர்கள் ஐவிடிபி நிறுவனருக்கு நன்றி கூறினர்.