districts

img

சர்வதேச கல்லீரல் மாற்றுச் சிகிச்சை சங்க தலைவராக ரேலா நியமனம்

சென்னை,மே 16- சர்வதேச கல்லீரல் மாற்றுச் சிகிச்சை சங்க தலைவராக புகழ் பெற்ற மருத்துவ நிபுணராக  திகழும் ரேலா மருத்துவ மனையின் தலைவரும் பேராசிரிய ருமான முகமது ரேலா நியமிக்கப் பட்டுள்ளார். ஆசியாவைச் சேர்ந்த ஒருவர் இச்சங்கத் தின் தலைவராக நியமிக்கப்படுவது இதுவே  முதல்முறையாகும்.  இது கல்லீரல் மாற்று  அறுவை சிகிச்சைக்காக அனைத்து நிலை களிலும் கல்வி, ஆராய்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகளாவிய லாப நோக்கமில்லாத சங்கம் ஆகும் இந்த நியமனம் குறித்து பேராசிரியர் ரேலா  கூறுகையில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றங்களை ஒருங்கிணைத்து, ஆலோசனைகளைக் பரிமாறிக் கொள்ளவும், பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்யவும் தனது நியமனம் உதவும் என்றார். பேராசிரியர் முகமது ரேலா உலகின் மிகச் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவர் ஆவார். கல்லீரல் மாற்று அறுவை  சிகிச்சை மற்றும் சிக்கலான பித்தப்பை தொடர்பான கணைய அறுவை சிகிச்சை குறித்து 500க்கும் மேற்பட்ட அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கட்டுரைகளை அவர் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை செய்துள்ளதோடு, 2000–ம் ஆண்டில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கின்னஸ் சாதனை புத்தகத் திலும் இடம் பிடித்துள்ளார்.

;