districts

முறைசாரா சங்க விருகம்பாக்கம் பகுதி பேரவை

சென்னை, மே 31 - சென்னை மற்றும் புற நகர் முறைசாரா தொழி லாளர் சங்கத்தின் விருகம் பாக்கம் பகுதி ஆண்டு பேரவை ஞாயிறன்று (மே 29) எம்.ஜி.ஆர் நகரில் நடை பெற்றது. மாநாட்டிற்கு பகுதித் தலைவர் ஏ.சத்யதாசன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் டி.ஏ.லதா, பொதுச் செய லாளர் யு. அணில்குமார், துணைத் தலைவர் வி.தா மஸ், பகுதிச் செயலாளர் என்.ராஜா, பொருளாளர் ஆர்.முருகன் உள்ளிட்டோர் பேசினர். பகுதி தலைவராக என்.ராஜா, செயலாளராக ஏ.சத்ய தாசன், பொருளாளராக திரு முருகன்  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.