districts

img

விழுப்புரம் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி சிஐடியு மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

விழுப்புரம், செப். 4- சிஐடியு விழுப்புரம் மாவட்ட 10வது மாநாடு  திருக்கோவிலூரில் அய்யப்பன் நினை வரங்கத்தில் ஞாயிறன்று (செப்.4) நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் எஸ். முத்துக்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் எம்.புரு சோத்தமன் செங்கொடியை ஏற்றி வைத்தார், ஆர்.மலர்விழி வரவேற்று பேசினார். பி.அருள்ஜோதி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநில செயலாளர் சி.ஜெயபால்  மாநாட்டை தொடங்கி வைத்துப்பேசினார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் ஆர்.மூர்த்தியும் பொருளாளர் வி.பாலகிருஷ்ணன் வரவு-செலவு கணக்கையும் சமர்பித்தனர். விவசாயிகள் சங்க நிர்வாகிகள்  ஆர்.டி. முருகன், கே.சுந்தர மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டை வாழ்த்தி பேசி னர். மாநிலச் செயலாளர் பி.கருப்பையன் நிறைவு ரையாற்றினார். ஆர்.கணபதி நன்றி கூறினார் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மின்சார மசோதா 2022யை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. புதிய நிர்வாகிகள் 36பேர் கொண்ட மாவட்டக்குழுவிற்கு தலை வராக எஸ்.முத்துக்குமரன், செயலாளராக ஆர்.மூர்த்தி, பொருளாளராக வி.பால கிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;