கடலூர், நவ.8- தமிழகத்தில் 24.45 கோடி எக்டர் பரப்பு நிலங்களை மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கிடும் பணியை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெள்ளியன்று துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்க ளிடம் பேசிய அமைச்சர், வேளாண்மைத்துறை வாயிலாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள வேளாண்மை பல்கலை கழகத்தை சார்ந்த 27,000 மாணவர்கள் மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு பணியில் கலந்து கொள்ள உள்ள னர். இப்பணியில் மாண வர்கள் கிராமங்களில் தங்கி கலந்து கொள்வதன் வாயிலாக நேரடியாக விவ சாயிகள் பயிர் செய்வதை காண்பதனால் அவர்க ளுக்கு சிறந்த பயிற்சியாக அமைவதுடன் பயிர்களின் நிலையை அறிந்திடும் வகையில் நல்ல பட்டறிவு அனுபவமும் கிடைக்கும். விவசாயித்திற்கு தேவையான உரம் தட்டுப் பாடில்லாமல் கிடைக்க வழிவகை செய்யப் பட்டுள்ளது. தற்போது யூரியா 1,60,937 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி 40,356 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 1,36,259 மெட்ரிக் டன்னும் இருப்பு உள்ளது. விவசாயிகள் அரசின் நலத்திட்ட பலன்களை பெறுவதற்கும், பல்வேறு நிறுவனங்களில் கடனுதவி பெற்றிடவும் விவசாயிகளின் நில உடமை தொடர்பான விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்றவற்றை பல்வேறு துறைகளுக்கு ஒவ்வொரு முறையும் விவ சாயிகள் தனித்தனியே வழங்கிட வேண்டிய நிலை உள்ளது. தற்போது, அனைத்து நில விவரங்கள் மற்றும் பயிர் சாகுபடி விவரங்கள் ஆகியவற்றை மின்னணு முறையில் சேகரித்து அவ்வப்போது புதுப்பித்து அவற்றை பல்வேறு துறைகளும் விவ சாயிகளின் நிலஉடமை மற்றும் சாகுபடி செய்தி ருக்கும் பயிர் விவரம் போன்ற தகவல்களை பகிர்ந்திட ஏதுவாக தமிழ்நாட்டில் வேளாண் அடுக்குத் திட்டம் கடந்த 2022-23 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கிராம அளவில் பயிர் சாகுபடி விவரங்களை மின்னணு முறையில் கணக்கீடு செய்யும் முறை கடந்த 2023-24 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார். கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், தோட்டக் கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்கு நர் பெ.குமாரவேல் முன்னி லையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர், 5 நபர்களுக்கு ரூ.2.16 லட்சம் மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத்துறை சார்பில் 28 நபர்களுக்கு தலா ரூ.87,500, பொறியி யல் துறை சார்பில் 2 நபர்களுக்கு ரூ.2.2லட்சம் மதிப்பீட்டிலும் மொத்தம் 35 பயனாளிகளுக்கு ரூ.5.3லட்சம் மதிப்பீட்டி லான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.