districts

கல்பாக்கம் அணுமின் நிலைய பணிகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை ஊராட்சி மன்ற தீர்மானம் வலியுறுத்தல்

கல்பாக்கம், மார்ச் 23 - சதுரங்கப்பட்டினம் ஊராட்சியில் இயங்கி வரும்  பாவினி அதிவேக ஈணுலை  பணிகளில் உள்ளூர் இளை ஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன  உள்பட பல்வேறு தீர்மானங் கள், சிறப்பு கிராம சபை  கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளது. கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் ஊராட்சிமன்ற கூட்டம் தலைவர் ரேவதி சுவாமி நாதன் தலைமையில் நடை பெற்றது. இதில், ஒன்றிய  கவுன்சிலர், வார்டு உறுப்பி னர்கள் மற்றும் கிராம மக்கள்  கலந்துகொண்டனர். கிராம சபை கூட்டத்தில், சதுரங்கப்பட்டினம் ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களின் தொழில் வரியினை ஊராட்சி நிர்வா கத்துக்கு செலுத்த வேண்டும், ஆனால், பாவினி  அதிவேக ஈணுலை மையம்  அமைக்கும் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்க ளின்  தொழில் வரி ஊராட்சி  நிர்வாகத்துக்கு செலுத் தப்படாமல் உள்ளது. இது தொடர்பாக, சம்மந்தப்பட்ட நிறுவனத்தின்  உயர் அதிகாரியிடம் ஊராட்சி தலைவர் கடிதம் வழங்கி யுள்ளார். இதன்பேரில், உரிய நடவடிக்கை மேற்கொண்டு தொழில் வரி யினை செலுத்த வேண்டும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அணுசக்திதுறை சதுரங்கப்பட்டினம் ஊராட்சி யில் வசிக்கும் தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளில் 40 விழுக்காடு முன்னுரிமை வழங்க வேண்டும். நிலா  கமிட்டியை ரத்து செய்ய  வேண்டும். சமூக பெரு நிறுவன நிதியில் 50  விழுக்காடு சதுரங்கப் பட்டினம் ஊராட்சியின் வளர்ச்சி மற்றும் உள்கட் டமைப்பு பணிகளுக்கு வழங்க வேண்டும். சதுரங்கப் பட்டினம் அரசு மருத்துவ மனைக்கு அணுசக்தி துறை மூலம் 24 மணிநேரம் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். மீனவர் பகுதியில் கடல் அரிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் கடற்கரையில் கருங்கற்களால் தடுப்பு ஏற்படுத்த வேண்டும். அணு சக்தி பள்ளி மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 40 விழுக்காடு சதுரங்கப் பட்டினம் ஊராட்சியை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்க வேண்டும் உள்பட  12 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

;