districts

உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் இந்தியாவுக்கு வெண்கலம்

ஐரோப்பிய நாடான அல்பேனியாவின் டுரெஸ் நகரில் உலக பளுதூக்குதல் இளைஞர் சாம்பியன்ஷிப்தொடர் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் ஆடவர் 67 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின்பரலி பெடப்ரேட் (15) மொத்தம் 267 கிலோ (119 கிலோ + 148 கிலோ) எடையை தூக்கி வெண்கலப்பதக்கம் வென்றார். ஆர்மீனியாவின் செரியோஷா பர்செக்யான் 275 கிலோ (128 கிலோ+147கிலோ) எடையை தூக்கி தங்கப்பதக்கமும், சவூதி அரேபியாவின் முகமது அல் மர்சூக் (270 கிலோ - 119 கிலோ+148 கிலோ) வெள்ளிப் பதக்கங்களையும் வென்றனர்.