சென்னை, ஜன. 29 - பெத்தேல் நகர் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்குவதில் ஆட்சி யாளர்கள் திசை மாறு கிறார்கள் என்று மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் கூறினார். பெத்தேல் நகர் குடி யிருப்புகளை அகற்றாதது தொடர்பான நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு விசாரணை வெள்ளியன்று (ஜன.28) அன்று உயர்நீதமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர், வீடுக ளுக்கான மின் இணைப்பை துண்டிப்ப தற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என கோரினார். அப்போது பாதிக்கப்ப டும் மக்கள் சார்பில் நீதிமன்ற உத்த ரவை மறுபரிசீலனை செய்யக்கோரி என்.ஜி.ஆர். பிரசாத் இடையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை திங்கட்கிழமைக்கு (ஜன.31) ஒத்தி வைத்தனர். இந்நிலையில், வழக்கறி ஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் தலைமையிலான குழுவினர் சனிக்கிழமையன்று (ஜன.29) பெத்தேல் நகர் பகுதியை பார்வையிட்டனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் என். ஜி.ஆர்.பிரசாத் கூறிய தாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேண்டுகோளை ஏற்று பெத்தேல் நகர் வழக்கில் ஆஜராகி உள்ளேன். 2015ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவை மக்கள் மீறிவில்லை. எனவே, மக்கள் கருத்தை கேட்க வேண்டும் என்று வலி யுறுத்தி மனு தாக்கல் செய்ததை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். ஒரு கட்டம் வரை அரசு மக்களுக்கு ஆதர வாக இருந்தது. நீதிமன்ற உத்தரவையடுத்து ஆட்சி யாளர்கள் திசை மாறு கின்றனர். முதலமைச்சர் அளித்துள்ள வாக்குறுதி களை நிறைவேற்றும் வகையில் அரசு வழக்கறி ஞர் உறுதியாக செயல்பட வேண்டும். ஆட்சியாளர்கள் யாருக்கு பாதுகாப்பு தரப்போகிறார்கள்? ஆட்சியாளர்கள் மக்க ளின் குரலை பிரதிபலிக்க வேண்டும். அரசு தரப்பு வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவை மீறி விட்டோம். கோவிட் காலம் என்பதால் குடியிருப்புகளை இடிக்க வில்லை, இல்லாவிடில் இடித்து விடுவோம் என்று கூறுகிறார்.
இது வழக்கை பலவீனப்படுத்தும். அரசி யல் கட்சித் தலைவர்கள், முதலமைச்சரிடம் வலி யுறுத்தி, அட்வகேட் ஜெனரல் உணர்வோடும், உணர்ச்சியோடும் வாதிட அறிவுரை வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை அரசும், மக்களும் மீற வில்லை. அதற்கான ஆவ ணங்கள் உள்ளது. பட்டா வழங்ககொள்கை முடி வெடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். மக்க ளின் குரலை ஆட்சியாளர்கள் பிரதிபலிக்க வேண்டும். அரசு மக்களுக்கு ஆதர வாக இருந்தால்தான், வழக்கில் வெற்றி பெற முடியும். நாட்டிற்கு விடுதலை கிடைத்தாலும் மக்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை. அதற்கான விடுதலைப் போராட்டத்தை நடத் துவோம். இந்த வழக்கு ஜன.31 அன்று விசா ரணைக்கு வரும் என்று எதிர்பார்கிறோம். இவ்வாறு அவர் கூறி னார். இந்நிகழ்வின்போது பெத்தேல் நகர் பாதுகாப்பு பேரவை நிர்வாகிகள் சூ.க.விடுதலைச்செழியன், ப.நாராயணன், வழக்கறி ஞர்கள் சிவக்குமார், திரு மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.