சென்னை, ஆக.24-
சென்னை நகரின் 384வது மெட்ராஸ் தினத்தை கொண்டாடும் விதமாக, ரியல் எஸ்டேட் துறையில் புகழ்பெற்ற நிறுவனமான டிஆர்ஏ ஹோம்ஸ், பல புதிய திட்டங்களுடன் வடசென்னையின் களத்தில் கால்பதிக்க வுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டிஆர்ஒ ஹோம்ஸ், சென்னை முழுவதும் பல இடங்களில் பல அற்புதமான இல்லங்களை உருவாக்கி யுள்ளது. இப்போது வடசென்னையின் மாதவரத்தில் இரண்டு திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த இரண்டு குடி யிருப்பு திட்டங்களையும் அந்நிறுவனம் விரைவில் தொடங்க வுள்ளது என்று அதன் நிர்வாக இயக்குனரான ரஞ்சித் ரத்தோட் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஏற்கனவே டிஆர்ஏ ஹோம்ஸ் ட்ரூலிவ் ஒலிம்பஸ் (போரூர்), டிஆர்ஏ அஸ்காட் (ஆதம்பாக்கம்), டிஆர்ஏ 90 டிகிரி (கோவிலம்பாக்கம்), டக்ஷிடோ எலைட் (வேளச்சேரி), டக்ஷிடோ (வேளச்சேரி) மற்றும் பிரைஸ்டைன் பெவிலியன் (மஹிந்த்ரா வேர்ல்ட் சிட்டி) ஆகியவற்றை அமைத்து அந்த இடங்களின் அடையாள மாக மாறியுள்ளது.