districts

கிண்டியில் போக்குவரத்து மாற்றம்

சென்னை, ஜூன் 13-

   கிண்டியில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை திறக்கப்படுவதையொட்டி ஜூன் 16 வரை போக்கு வரத்தில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.  

   இதுதொடர்பாக சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப் பதாவது:-

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கிங்ஸ் இன்ஸ்ட்டிட்யூட் அருகில் வருகிற 15 ஆம் தேதி (வியா ழக்கிழமை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

   இது தொடர்பான பணி, பொது பணித்துறையின ரால் சைதாப்பேட்டை 5  விளக்கு சந்திப்பு மற்றும் தேசிய திறன் பயிற்சி நிறு வனத்திற்கு இடையில் ஆலந்தூர் பிரதான சாலை யில் நடந்து வருகிறது. இதனால், வருகிற 16 ஆம் தேதி வரைஆலந்தூர் பிர தான சாலை தற்காலிகமாக போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது