ஓசூர், ஆக.12-
ஓசூர் பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், 11 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் ரேகா, மானிஷா ஸ்ரீ ஆகியோர், ஆண்கள் பிரிவில் இளைய சந்திரன், தர்ஷன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இதே போல், 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் யாழினி, சமிக்க்ஷா, ஆண்கள் பிரிவில் கிஷோர், லோகேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.