districts

img

தாயுடன் உள்ள மைனர் குழந்தைகளை தந்தையிடம் ஒப்படைத்தால் சமநிலையின்மை உருவாகும்:

சென்னை, செப். 2- தாயின் அரவணைப்பில் மகிழ்ச்சியாக  இருக்கும் மைனர் குழந்தைகளை, தந்தை யின் கட்டுப்பாட்டில் அனுப்பினால், குழந்தைகளின் வாழ்வில் சமநிலை யின்மையை உருவாக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்தியாவில் மனைவியிடம் உள்ள குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி அமெரிக்காவில் உள்ள கணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கல்வி, வாழ்வு, சமுதாயம் ஆகியவற்றில் முன்னேற்றம் காணும் வகையில், குழந்தைகளை அமெரிக்கா அழைத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இதற்கு அவரது மனைவி தரப்பில், அமெரிக்காவிலிருந்து வந்து குழந்தை களை சந்தித்து, தன் பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்று வந்து கொண்டி ருக்கிறார். மகள் சென்னையில் சர்வதேச பள்ளியில் படிக்கிறார். இரு குழந்தை களையும் கணவருடன் அனுப்ப முடி யாது இவ்வாறு மனைவி தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, 12 வயது சிறுமி போதுமான விவரம் அறிந்தவராகவும், அக்காவின் பிணைப்பில் இருக்கும் 2 வயது குழந்தை சுட்டிப்பையனாகவும் இருப்பதாக நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா நெகிழ்ச்சியாக தெரிவித்தார். அதோடு, தங்களது எதிர்காலத்தின் மீது தாய், தந்தை இருவரும் அக்கறை கொண்டுள்ளதை 12 வயது சிறுமி உணர்ந்திருக்கிறார். தந்தை மீதும் பாச மாக உள்ளார். பள்ளி இறுதி படிப்பை தற்போதைய பள்ளியிலேயே முடிக்கவும், உயர் கல்விக்கு வேண்டுமானல் அமெரிக்கா செல்லவும் சிறுமிக்கு விருப்பம் உள்ளது. இவ்வாறு நீதிபதி  ஆர்.என்.மஞ்சுளா கூறினார். மேலும், தாயின் அரவணைப்பில் சந்தோசமாக இருக்கும் மைனர் குழந்தை களை தந்தையின் கட்டுப்பாட்டில் அனுப்பினால், குழந்தைகளின் வாழ்வில் சமநிலையின்மையை உருவாக்கும் எனக்கூறி மனைவியிடம் உள்ள குழந்தை களை ஒப்படைக்க கோரிய அமெரிக்காவில் உள்ள கணவனின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.