districts

img

ஐசிஎப் புதிய பொதுமேலாளர் பொறுப்பேற்பு

சென்னை, பிப். 1- ஐசிஎப் புதிய பொது மேலாளராக யு.சுப்பாராவ் (56) வியாழனன்று (பிப். 1)  பொறுப்பேற்றுக் கொண் டார்.  ஐசிஎப் பொது மேலாளர் பி.ஜி.மால்யா பணி ஓய்வு பெற்றதையடுத்து இந்திய ரயில்வே இயந்திரப் பொறியியல் சேவை பிரிவைச் சேர்ந்த சுப்பாராவ் புதிய பொதுமேலாளராக பொறுபெற்றுக் கொண்டார்.  சுப்பாராவ் இயந்திரப் பொறியியல் இளங்கலை பட்டமும், பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் பொது நியதி மற்றும் மேலாண்மையில் முதுநிலை பட்டமும் பெற் றுள்ளார். ஐசிஎப் பொதுமேலா ளராக பொறுப்பேற்கும் முன், தென்மேற்கு ரயில்வே யின் கூடுதல் பொதுமேலா ளராகவும், இதர ரயில்வேக் களில் பல்வேறு பொறுப்பு களை வகித்துள்ளார். பாரிஸ் மற்றும் ஜோகன் னஸ்பர்க்கில் முதுநிலை மேலாளர்களுக்கான பயிற்சியில் பங்கு கொண்ட துடன், அமெரிக்காவில் டிடிசிஐ நிறுவனத்தில் மின் தொடர் வண்டி சக்கர  வடிவமைப்புக்கான சான்றி தழும் பெற்றுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.