districts

img

ஓசூர் புத்தகத் திருவிழா நிறைவு ரூ.1கோடி புத்தகங்கள் விற்பனை

கிருஷ்ணகிரி,ஜூலை 24 - ஓசூரில் 13 வது ஆண்டாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய புத்தகத் திருவிழாவில் 105 அரங்குகள், 1 லட்சம் தலைப்புகளில் 25 லட்சத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள் ரூ. 1 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. மேலும், சுமார் 5 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களும் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் முனைவர் சேதுராமனின் கூறுகையில், “புதிதாக இந்த முறை பெங்களூரைச் சேர்ந்த மாணவர்களும் புத்தக திருவிழாவிற்கு வருகை தந்தவுடன் ஆர்வத்துடன் புத்தகங்கள் வாங்கிச் சென்றனர்”என்றார். ‘தினம் ஒரு அறிவியல் அறிவோம்’ என்ற தலைப்பில் அறிவியலாளர்கள், அறிவியல் குறித்த நூல், துணைத் தலைவர் மணிமேகலையின் கையில் ...கடல்.. ஹைக்கூ உள்ளிட்ட  15 க்கும் மேற்பட்ட நூல்கள் தினமும் விழாவில் வெளியிடப்பட்டது என்றும் அவர் கூறினார். அடுத்த திருவிழா... 14 வது ஓசூர் புத்தகத் திருவிழா அடுத்தாண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி தொடங்கும் என்று புத்தக திருவிழா மதிப்புறு தலைவர் பேராசிரியர் வணங்காமுடி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, இ புத்தகத் திருவிழா குழுவினரை செயலாளர் பாலகிருஷ்ணன் அறிமுகம் செய்தார்.