districts

img

சுகாதார சீர்கேடு சரி செய்யப்படும்-அரசு அதிகாரி வாக்குறுதி

திருவள்ளூர், ஜன 22- சின்னம்பேடு கிராமத்தில் நிலவும் சுகாதார சீர்கேட்டை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சனிக்கிழமை அன்று (ஜன-22)  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.         பொன்னேரி அருகில் உள்ள சின்ன ம்பேடு ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தாழ்த்த ப்பட்ட மக்கள் குடியிருக்கும் பகுதியில் கழிவ றைகள் இல்லை.  இப்பகுதியில் பொது சுகாதாரம் கேள்விக்குள்ளாக்கி வருகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் கடுமை யான பாதிப்பு உள்ளாகி வருகின்றனர்.சின்னம் பேட்டில் கழிவறை இல்லாததால்  பெண் கொடுக்க கூட மறுத்து சில திருமணங் ்கள் தடை பட்டு வருவதாக கூறப்படுகிறது.  சுகாதார சீர்கேட்டை சரிசெய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த னர். இந்த நிலையில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பொது கழிப்பறை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.   ஆனால் 2 ஆண்டுகள் கடந்த நிலையிலும் பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு  வாரம் தோறும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வழி பாட்டிற்காக வந்து செல்கின்றனர். அங்கு  மக்கள் வரிப்பணத்தில் கட்டப் ்பட்ட கழிவறைகள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் அவதிப் ்படுகின்றனர். இதனை உடனடியாக திறக்க வேண்டும், கூடுதலாக கழிவறைகள்கட்ட வேண்டும், சின்னம் பேட்டில் நிலவும் சுகாதார சீர்கேட்டை சரிசெய்ய வேண்டும் உள்ளிட்ட பல  கோரிக்கைகளை வலியு றுத்தி சனிக்கிழமை அன்று ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த போராட்டத்திற்கு  கிளை செயலாளர் கே.திராவிடன் தலைமை தாங்கி னார். இதில் கட்சியின் பகுதி செய லாளர்  எஸ்.இ.சேகர், மாவட்ட குழு உறுப்பின ர்கள் இ.தவமணி, எஸ்.எம்.அனீப், டி.மதன், பகுதி குழு உறுப்பினர் கே.நாகராஜ், வாலிபர் சங்க மாவட்ட துணை செயலாளர் டி.பிரசாந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  போராட்ட களத்திற்கு வந்த சோழவரம் வட்டார வளர்ச்சி அலு வலர் குலசேகரன் அனைத்து பணிகளையும் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க ப்படும் என உறுதியளித்தார்இதனை தொடர்ந்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.