அண்ணா நகர், ஜூலை 25 - சென்னையில் உள்ள 8 பிரதான சாலைக ளில் ஞாயிறன்று (ஜூலை 31)‘ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்’ நிகழ்வு நடைபெற உள்ளது. இதனால் அந்தச்சாலைகளில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட உள்ளது. வாகனம் அல்லாத போக்குவரத்தை மேம்படுத்தவும், உடற்பயிற்சி மற்றும் மகிழ்வான மனநிலையின் முக்கியத்து வத்தை மக்களுக்கு உணர்த்தும் வகை யிலும், நெருக்கடி நிறைந்த சாலைகளில் ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி நடத்தப்படு கிறது. இந்நிகழ்வுக்கு சென்னை போக்கு வரத்து காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி 5 ஞாயிற்றுக்கிழமைகள் நடத்தப்படுகிறது. அண்ணா நகர் 2வது அவென்யூ, ராஜீவ் காந்தி சாலை (ஓஎம்ஆர்), காந்தி நகர் 4வது பிரதான சாலை (அடையாறு), காதர் நவாஸ் கான் சாலை (நுங்கம்பாக்கம்), லஸ் சர்ச் சாலை (மயிலாப்பூர்), ஆர்ம்ஸ் சாலை (கீழ்ப்பாக்கம்), லட்சுமணன் சாமி சாலை (கே.கே.நகர்) காமராஜர் சாலை (மெரினா) ஆகிய 8 இடங்களில் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்’ நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்த பகுதிகளில் ஞாயிற்றுக் கிழமைக ளில் காலை 6 மணி முதல் 9 மணி வரை சுமார் 800 முதல் 1000 மீட்டர் வரை சாலைக ளில் வாகன போக்குவரத்து நிறுத்தப்படும். ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் - நோக்கங்கள் தொடர்பான நடனம், பாட்டு, இசை நிகழ்ச்சிகள், இலவச சைக்கிள் ரெய்டு, ஸ்கேட்டிங், கோணிப்பை ஓட்டப் பந்தயம், கயிறு இழுத்தல், கைப்பந்து, பூப்பந்து, கிரிக் கெட், டார்ட் போர்டு போன்ற விளை யாட்டுகள் நடத்தப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.