districts

img

தொழில்துறையில் வளர்ந்து வரும் அணுகுமுறைகள் குறித்த சர்வதேச மாநாடு

சென்னை,மார்ச் 30- சென்னை வடபழனியில் உள்ள எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி  (எஸ்ஆர்எம்ஐஎஸ்டி)  மேலாண்மைக் கல்லூரி யில் தொழில் துறையில் வளர்ந்து வரும் அணுகு முறைகள் மற்றும் தரம் குறித்து ஒரு சர்வதேச மாநாடு வியாழனன்று மார்ச் 30அன்று தொடங்கியது. வெள்ளிக்கிழமை (மார்ச் 31) வரை நடை பெறவுள்ள இந்த மாநாட்டை ஒமன் திறந்த நிலை பல்கலை கழகத்துடன் இணைந்து எஸ்ஆர்எம்ஐஎஸ்டி நடத்துகிறது. இதில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முக்கிய ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் பேச்சாளர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். துவக்கநிகழ்ச்சியில்  எஸ்.ஆர்.எம் ஐ.எஸ்.டி இணைவேந்தர் ரவிபச்ச மூத்து, ஒமன் அல் ஜபர் நிறுவனர் முகமதுஅல்வஹைபி, எஸ்.எச். நிர்வாக இயக்குநர் ஃபெபின் எம்எஃப், ஓமனில் உள்ள  அரபு திறந்தநிலை பல்கலை கழக துணை பேராசிரியர்  டாக்டர். முகமதுஅல்ஹசியசி, திட்ட ஒருங்கி ணைப்பாளர்  முனைவர் பால சுப்பிர மணியன், இந்திய விமான ஆணையக பொது மேலாளர் வி. முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தொழில்-நுட்ப முன்னேற்றம்.நிலை யான ஆராய்ச்சி, ஆகிய கண்டத்தில் தொழில்நுட்பத்தின் புரட்சி மற்றும்ஸ்டார்ட் அப் சூழல் குறித்து இவர்கள் உரை யாற்றினர்.  எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி பேராசிரியர்கள் சி. பிரசீதா எம். ராஜேஸ்வரி, உதவி பேராசிரியர் .ம. கலைவாணி, சிஇடி  முதல்வர் சி.வி. ஜெயக்குமார் உள்பட பலர் பேசினர்.

;