districts

img

குரூப் 4 தேர்வு: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கடலூர்,ஜூன் 9- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யம் மூலம் குரூப்-4 -ல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வு  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி உள்ளிட்ட  10 வட்டங்களில்  240 இடங்களில் அமைக்கப் பட்டுள்ள தேர்வு மையங்களில் 95 ஆயிரத்து 350 பேர் எழுதினர். முன்னதாக தேர்வர்கள்  தேர்வாணை யத்தின் இணையதளத்தில்இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு மற்றும் தங்களுடைய ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையின் அசல் அல்லது  நகல் ஆகியவற்றின் ஏதேனும் ஒன்றின்  நகல்களை சோதனை செய்து அனுமதித்த னர். தேர்வை கண்காணிக்க 54 நடமாடும் குழுக்கள், 32 பறக்கும் படையும் அமைக்கப் பட்டுள்ளது. இவர்கள் தேர்வு மையத்திற்குள்  கண்காணித்தனர்.