21 மாதகால நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாலை நேர தர்ணா போராட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் டி.டி.ஜோஷி தலைமையில் நடைபெற்றது. வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர்கள் ரமேஷ், பா.வேலு, கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆர்.சேகர், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஜோசப் அன்னையா, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ஆர்.ஜெயக்குமார், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏழுமலை, மருந்தாளுநர் சங்க மாநில செயலாளர் வேந்தன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.