districts

img

வடசென்னையில் அரசு கலைக் கல்லூரி மாதர் சங்க வடசென்னை மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 19- வடசென்னையில் அரசு  கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என மாதர் சங்கத்தின் மாவட்ட மாநாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் வடசென்னை மாவட்ட 16 ஆவது மாநாடு திரு வொற்றியூரில் தோழர்கள் மைதிலி சிவராமன், பிருந்தா நினைவரங்கில் செவ்வாயன்று (ஜூலை 19) நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் வி.சாந்தி சங்கக் கொடியை ஏற்றினார். மாவட்டத் தலைவர் ஏ.தமிழ் செல்வி தலைமை தாங்கி னார். மாவட்ட துணைச் செயலாளர் ஜெ.பிரமிளா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மத்தியக்குழு உறுப்பினர் ஜி.பிரமிளா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச்  செயலாளர் எஸ். பாக்கிய லட்சுமி செயலாளர் அறிக் கையையும், எம்.கோட்டீ ஸ்வரி வரவு செலவு அறிக் கையையும் சமர்ப்பித்தனர். சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.ராணி, சிபிஎம் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.ஜெயராமன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.பி.சரவண தமிழன், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட் டத் தலைவர் எம்.காவியா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மத்தியக் குழு உறுப்பினர் ராதிகா மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக தலைமை ஆசிரியர் டி.கீதா வரவேற்றார். மாவட்டக் குழு உறுப்பினர் கே.கே.புஷ்பா நன்றி கூறினார். 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.விமலா, மாவட்ட துணைச்  செயலாளர் எஸ்.பவானி,  மாவட்டக் குழு உறுப்பினர் தேவி ஆகியோர் தீர்மானங் களை முன் மொழிந்தனர். முன்னதாக தவமணி நினைவு ஜோதியை ஆர்.விமலா வழங்க மத்தியக் குழு உறுப்பினர் ராதிகா பெற்றுக் கொண்டார். கலா  நினைவு ஜோதியை பி.கஸ் தூரி வழங்க எம்.கோட்டீ ஸ்வரி பெற்றுக் கொண்டார். சுகுணா நினைவு ஜோ தியை வி.இந்திரா வழங்க மத்தியக் குழு உறுப்பினர் ஜி.பிரமிளா பெற்றுக் கொண்டார். ஜான்சிராணி நினைவு ஜோதியை உஷா வழங்க எஸ்.ராணி பெற்றுக் கொண்டார்.

தீர்மானங்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் சக்தி மெட்ரிக் பள்ளி யில் தொடர்ந்து நடைபெறும் மர்ம மரணங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும், வடசென்னை பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண் டும், அரிசி மீது போடப்பட் டுள்ள ஜி.எஸ்.டி. வரியை  ரத்து செய்ய வேண்டும், பெண்கள், பெண் குழந்தை கள் மீதான வன்முறைக ளுக்கு காரணமான டாஸ்மாக் கடைகளை படிப் படியாக மூட வேண்டும், சமையல் எரிவாயு சிலிண் டர் விலை உயர்வை கட்டுப் படுத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக எம்.கோட்டீஸ்வரி, செய லாளராக எஸ்.பாக்கிய லட்சுமி, பொருளாளராக எஸ்.பூங்குழலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;