districts

img

கருணை அடிப்படையில் 10 பேருக்கு அரசு பணி நியமன ஆணை

கள்ளக்குறிச்சி, செப்.4- கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அளவில் பணிபுரிந்து பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  அந்த வகையில், 10 நபர்களுக்கு கிராம உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். நந்தகோபால் என்பவருக்கு கள்ளக்குறிச்சி வட்டத்திலும், சுதா மற்றும் ரம்யாவுக்கு வாணாபுரம், ஆனந்தனுக்கு கல்வராயன்மலை, ஆரோக்கிய மகிமை ஜான்சிக்கு உளுந்தூர்பேட்டை வட்டத்தி லும் கிராம உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. ஜெயபிரகாஷ்,  ஹரிகிருஷ்ணன் ஆகி யோருக்கு திருக்கோவிலூர் வட்டத்திலும், வினோதினக்கு உளுந்தூர்பேட்டை, மஞ்சுளாவுக்கு சின்னசேலம், குயில் என்பவருக்கு சங்கராபுரம் வட்டத்திலும் கிராம உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே புதிய அரசு வேலைவாய்ப்பு பெற்று பணியில் சேர்ந்தவர்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என பொதுப்பணித்துறை அமைச்சர் அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினர் மலையரசன், மாவட்ட வரு வாய் அலுவலர் ஜீவா,  நகர் மன்ற தலை வர் சுப்ராயலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.