சிதம்பரம், ஜூலை 31-
சிதம்பரம் கரந்தை ஜெயகாந்தம், துரைக்கண்ணு, சேக்கிழார், சுவாமிநாதன், பழனி அம்மாள் ஆகியோரின் நினைவாக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தமிழ் ஆசிரியருக்கு ‘நற்றமிழ் நல்லாசிரியர்’ விருது வழங்கப்படுகிறது. மேலும் தமிழ் பாடத்தில் 10, மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெறும் மாண வர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்க படுகிறது.
இந்த ஆண்டு ஞானபிரகாசம் தெரு, வடகரையில் உள்ள சேக்கிழார் மணி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் செயலாளர் அருள்மொழி செல்வன் தலைமை தாங்கினார். இதில், அரசு உதவிப்பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் சந்துருவுக்கு நற்றமிழ் நல்லாசிரியர் விருது வழங்கினர்.
ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி, அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தமிழில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு விருது மற்றும் சான்றுகள் வழங்கப் பட்டன.
முன்னதாக, இவ்விழாவில் திருமுறை இசைக்க பட்டது. தமிழ் ஆசிரியர் செல்வம் தொகுத்து வழங்கினார். ஆறுமுக நாவலர் பள்ளியின் ஆசிரியர் மற்றும் மாண வர்கள் கலந்து கொண்டனர்.